Be an Inventor!
எல்லோருக்கும்
வணக்கம்!
உலகத்தில்,
இந்தியாவில் உள்ள மாணவர்கள் என்ன ஆவார்கள் என்பது தான் முக்கியமான கேள்வி
Education மூலமாகத் தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற தீவிர காலகடட்த்தில்
பாஸ் பண்ணு, ஸ்கோர் பண்ணு, உடனே கேம்பஸ்ல வேலை வாங்கி வேலைக்கு போ-ன்ற வேலையை தவிர
இந்திய இளைஞர்களுக்கு வேறு கொடுக்கப்படவில்லை என்றுதான் கருதுகிறேன்.
1970-ல்
இந்தியாவின் மறுமலர்ச்சி பீரயட் என சொல்வார்கள். கல்லூரிகளில் பள்ளிக்கூடங்களில் எல்லாம்
ஒரு தமிழ் ஆசிரியர் இருப்பார், வரலாற்று ஆசிரியர் இருப்பார், சமூகத்தை நோக்கி உன் பார்வையை
திருப்பு என்று மாணவர்களை உசுப்பேத்தி விட்டுக்கொண்டே இருப்பார். ஒரு Point of
View -யை
தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருப்பாங்க. எந்த கல்வியால்
சமூகத்துக்கு எந்த பயனும் இல்லையோ அந்த கல்வியால் பயனில்லை.
நாளைக்கு
நான் எஞ்சினியராகி என்ன பண்ணப்போறன்னு நினைக்கிறவன் எஞ்சினையராகி எந்த பயனும் இல்ல.
ஒரு
கல்லூரி வாசலுக்குள்ளே வந்து சேரும் ஒவ்வொரு மாணவனும் எந்த மாதிரியான ஒரு எதிர்கால
திட்டத்தோட உள்ளே வருகிறான் என்பதை அவனாளயே தீர்மானிக்க முடியவில்லை. அவனுடை கல்வியை யாரோ தீர்மானிக்கிறார்கள்.
உலகத்திலேயே
கஷ்டம் பத்தாம் கிளாஸ் படிக்கறதும், பண்ணன்டாம் கிளாஸ் படிக்கிறதும்தான். போற வற்றவன்லாம்
கேள்வி கேப்பான், பால்காரம்மா, டீ கடைக்காரர், பக்கத்துல பெட்டிக்கடை வைச்சிருக்கிறவன்,
வீட்டுல திருடிட்டு ஏழு வயசுல ஊரைவிட்டு ஓடிப்போனவன் கேப்பான், ஒழுங்கா படிக்கிறயா
இல்லையா?, ‘டேய் நீயே ஒழுங்கா படிக்கல, எங்கிட்ட கேக்கிறியானு தான் தோணும்.
சம்பாதிப்பதற்கு
படி என்று சொல்கிற சமூகம் அதை சமூக பங்களிப்பிற்கு கொடு என்று சொல்லிக்கொடுப்பதே இல்லை.
அறிவு
என்பது ATM மெஷினிற்கு செல்கிற ஏற்பாடு என்று பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திய சமுதாயம்
தீர்மானித்துவிட்டது தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிற அத்தனை பிரச்சினைகளுக்கும்
காரணம்.
ஒரு
Creator ஆல் தான் நல்ல எஞ்சினியராக மாறமுடியும். எவன் ஒருவன் சமூகத்தின் மீது அக்கறை
கொண்டிருக்கிறானோ அவன் படிக்கிற படிப்பு சமூகத்துக்கு திரும்ப வரும்.
ஆனா,
இன்னைக்கு நடந்துக்கிட்டு இருக்கிறது என்ன we are doing our courses for market
demand not for the social demand.
Market demand என்பது இன்றைய சந்தையில் எந்தெந்த
பொருள் தேவைப்படுகிறதோ எந்தெந்த
indristry-க்கு ஆட்கள் தேவையோ அதை வைத்து படிப்பதுதான் market demand.ஆனால் மக்களுடைய
தேவையை அறிவியல் பார்வையில் சரிசெய்து தருவதுதான் social demand.
இங்கு
படிக்ககூடிய ஒவ்வொருத்தருக்கும் சரி, இந்த காலேஜா இருந்தாலும் எந்த காலேஜா இருந்தலும்
சரி social demand-க்காக படிங்க.
இந்திய
தேசத்தில் இன்னைக்குகூட மிக கஷ்டமான நிலையில் விவாசாயிகள் போராடிட்டு இருக்காங்க, அவங்களுக்கு
குறைந்த விலையில் ஒரு கருவியை தருவதற்காக படிக்கிறேன் என்றால் உன் படிப்புடைய நோக்கம்
பெரியது.
இன்னைக்குகூட
மருந்து செலவுக்கு காசு கொடுக்க முடியாமல் இருக்கும் ஒரு ஏழை அம்மா அப்பாவுக்கு 5 ரூபாயில்
ஒரு மருத்துவத்தை கொடுக்க ஒரு கருவியை கண்டுபிடிக்க போகிறேன், அப்படின்னு மனசுல ஏத்திக்கிட்டு
படிங்க, இதுக்கு பேரு தான் படிப்பு.
சமூகத்தின்
மீது துளியும் கிள்ளிப்போடாத எந்த படிப்பின் மீதும் எனக்கு மரியாதை இல்லை.
ஒரு
பிள்ளைக்கு ஒரு தடுப்பூசி போடனும்னா எல்லா அப்பா அம்மாவுக்கும் தெரியும் 350 ரூபாய்க்கு
ஒரு தடுப்பூசி போட்டா அந்த பில்ளைக்கு 3 நாள் காய்ச்சல் வரும், அந்த பிள்ளை இருமும்,
கஷ்டப்படும், வலியால் துடிக்கும், ஆனால் 6000 ரூபாய்க்கு ஒரு மருந்து இருக்கு, அதே
மருந்து தான் அதே தடுப்பூசிதான், 6000 ரூபாய்க்கு அதை போட்டங்கன்னா பிள்ளை அழுகாது,
3 நாள் காய்ச்சல் அடிக்காது, உடம்பு துடிக்காது, தூக்கி தூக்கி போடாது, காசு இருக்கிற
அப்பா 6000 ரூபாய் காசு தூக்கிப்போட்டு அந்த ஊசியை போட்டுக்கறார், காசில்லாத ஒரே காரணத்துக்காக
பிள்ளையை தவிக்கவிட்டு அழுகவிட்டு 350 ரூபாயை கொடுத்துவிட்டு பின்பக்கம் திரும்பி நின்னுக்கிட்டு
பிள்ளை அழுகிறதை பாக்கமுடியாத தகப்பனுக்கு பதில் சொல்ல முடியாத அறிவியலால் என்ன புண்ணியம்
இருக்கிறது.
What
is the purpose of the education? ஒரு ஏழை இந்திய அப்பாவுக்கு பதில் சொல்ல முடியாத
ஒரு அறிவியல் தேவையேயில்லை.
The
moto is towards society not towards ATM Machines.
ஒரு
காலத்துல 4 ஆப்பில் துண்டை வெட்டிக்கொடுத்து பக்கத்துல இருக்கிற 2 பிள்ளைக்கு கொடுத்துட்டு
சாப்புடு -னு சொன்ன அம்மா இன்னைக்கு பத்தரமா தனியா உக்காந்து சாப்புடுன்னு சொல்லிட்டு
பள்ளிக்கூடம் அனுப்பறத பாதகம் என்று இருந்து விடமுடியுமா?
அந்த
பிள்ளை படிச்சிட்டு வந்து என்ன பண்ணப்போறான், இல்லாதவனுடைய கஷ்டத்தைப் பத்தி தெரிஞ்சிக்காதவன்
படிச்சி என்ன படிக்காம இருந்தா என்ன?, அடுத்தவன் வீட்டு பசியை பார்க்காமல் நாய்க்குட்டி
வளர்த்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருப்பவன் படித்து என்ன படிக்காமல் இருந்தால்
என்ன?
I
should educate yourself for a social demand,
இன்னைக்கும் உலக நாடுகளிலிருந்து Technology யை கடன் வாங்கிகிட்டு இருக்கிறவன்
அந்த Technology யை கடன் வாங்ககூடாது. இந்தியன் டெக்னாலஜியை உலக நாடுகள் பயன்படுத்தனும்,
அப்படிங்கறதுக்காக காலேஜுக்குள்ளாற காலடி எடுத்து வைக்கறன்னு படிக்கணும்.
பிள்ளைகள்ட்ட
போய் நீ நல்லா படி, பொருப்பா இரு, பொழச்சிக்கலாம் -னு சொன்னா கேக்கமாட்டான், நல்லா
படி, நல்லா ஒர்க் பண்ணு, நல்ல மார்க் எடு, இந்த நாட்டுக்கு எதையாவது உன்னால செய்ய முடியும்னா
ஒரு கல்வியுடைய பார்வை பெரிதாகிறது.
படிக்கிறவனுக்கு
படிப்பு குறித்த பார்வை பெரிதாவதற்கு தேவைப்படக்கூடிய காரணிகள் சமூகம் தொடர்ந்து சொல்லித்தரவில்லை
என்றுதான் நான் நம்புகிறேன்.
படிக்கிறவனுக்கு
படிப்பு குறித்த பெரிய பார்வை இல்லை, அதனுடைய பார்வை என்பது சம்பாதித்து வாழ்க்கை நடத்துவது
என்பதை தான் சமூகம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது,
இதே
21 வயசுல தங்கச்சி கல்யானத்துக்காக துபாய்ல போய் தலைகீழா நின்னுட்டு பெயிண்ட் அடிச்சிட்டு
இருக்கானே அதுக்காக படிக்கிறது தான் படிப்பு, மத்ததெல்லாம் சிலபஸ், அடுத்தவனுக்காக
இறங்குவதற்கு, படிக்கிற படிப்பு பயன்படும் என்று நம்புகிறபோதுதான் ஒரு சமூகத்தை உய்விக்கமுடியும்.
ஒட்டுமொத்த சமூகத்தை மாற்றுகிற சக்தி கல்வியால் மட்டுமே
முடியும் என்கின்ற பிண்ணனி அதுதான்.
வாழ்வதற்கே
பயமுறுத்துகிறது கல்வி, வாழ்க்கைன்னா என்ன?, என்ன வாழ்றதுதான்.what is the purpose
of life the very purpose of life is living. வாழ்வின் அடிப்படை நோக்கம் என்பது வாழ்தல்தான்
சாதிக்கிறது. ஜெயிக்கிரது இமயமலையில ஏறி நிக்கிறது.
அப்புறம் world cup ஜெயிக்கிரது அதெல்லாம் அப்பறம்
வாழுங்க முதலில். கல்வி என்றால் விழுந்தால் எழுந்துக்கொள்ளலாம் நீ என்கிற நம்பிக்கையை
தரவேண்டும். ஆனால் கல்வி முலமாக நம் பிள்ளைகளை விழுந்துராதப்பானு பயமுறுத்திக்கிட்டே
இருக்கோம்.
விழுந்தாலும்
நீ எழமுடியும் என்ற நம்பிக்கையை தருவதற்கு பெயர் தான் கல்வி.
விழுந்துவிடக்கூடாது
என்ற அச்சுறுத்தலுக்கு பெயர் கல்வி கிடையாது. ஆனால் அந்த அச்சுறுத்தலைத்தான் கொடுத்துக்கிட்டு
இருக்கோம். படிக்கலனா தோத்துடுவ, படிக்கலனா தோத்துடுவ, படிக்கலனா தோத்துடுவ, சரி, படிக்கல
நான், போங்கடாம்பான். 21 வயசுல என்ன தோணும் அவனுக்கு, ஒரு பையன் தொடர்ந்து தன் வீட்டைதான்
அதிகமாக நம்புகிறான், ஆம்பிஷன்ஸா இருக்கிறது வேற பிரஷ்ஷரா இருக்கிறது வேற, ஒரு குறிக்கோளோட
வாழ்க்கையை நடத்த வேண்டும்ன்றது உண்மைதான், ஆனால் குறிக்கோள் நோயா இருக்க்கூடாது, இங்கே
குறிக்கோள் நோயா மாறிக்கிட்டு இருக்கிறது.
இந்த
ரோட்ல 7 கார் போவுது, பஸ் போவுது, ஆனால் நடக்கவே முடியாதவன் 7 கிலோ மீட்டர் நடந்தே
போறானே அவனுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் அறிவியல் பற்றி யாருக்குமே
உருத்தலையா, தோணவில்லையா? You are the engineers உங்களுக்கு தோணனும்ல்ல, ழகரம் இடரினால்
ஒரு தமிழ் ஆசிரியனுக்கு வலிக்கும், வரலாறு பற்றி தவறாக நீங்கள் சொன்னால் ஒரு வரலாற்று
ஆசிரியனுக்கு வலிக்கும், தெருவெல்லாம் வெளிநாட்டு கார்கள் தெரிகிறது, கையிலெல்லாம்
வெளிநாட்டு போண்கள் இருக்கிறது. நீங்களெல்லாம் எஞ்சினியர்கள் உங்களுக்கு வலிக்கனும்,
உலகம் முழுக்க இந்திய பொருட்கள் விற்கணும், அதற்கான பொருளை தாயாரிப்பேன் அதற்கான தொழில்நுட்பத்தை
உருவாக்குவேன் என்று சொல்கிற திமிர்தான் அறிவியல், எனக்கு தெரிஞ்சதும் அதுதான்,
நன்றி வணக்கம்!.
No comments:
Post a Comment