Thursday, 27 March 2014

Senthilkumaran Kavithai

Monday, July 21, 2008

vazhindha
kanneerai
thudaithu kollak kuda
theriyadha PENNEI
eppadi en
kangalai
kulamaakka katruk kondaai!

Senthilkumaran Kavidhaikal


நண்பா
---------
உனக்குத் தெரிந்த
மொத்த
தமிழ் வார்த்தைகளே
'வணக்கம்'
'நன்றி'
'தம்பி'
'போடா மச்சான்..'

நீ
பச்சை ஊர்தியில்
நீலப்பட சிடி
விற்றதை
வாங்கிப் போன ஆளிள்
நாணும் ஒருவன்!

உன்னை
அன்று
கைது செய்தார்கள்!
உன்
தடும்பலான
உடம்பை இழுத்து கைய்யில்
விளங்கு திணித்தார்கள்!

எத்தனை அபராதமோ!
எத்தனை தண்டனையோ!

மனம் கிடந்து
தவிக்கிறது!

ஓ...
என் சீன நண்பா!
யாரிடமிருந்தும்
நல்லதை மட்டும்
கற்றுக்கொள்!

-----

Sunday, May 11, 2008


எம் மவ..
-------
மொளா விக்கறவன்
மல்லாட்ட உடைக்கறவன்
பூண்டு விக்கிறவன்
அஞசரப்பெட்டி சரக்கு அடிக்கிறவன்
சாவி போடறவன்
ஐஸ் விக்கிறவன்
பலுவணு விக்கிறவன்
அம்மிக்கல்லு கொத்தரவன்
மாட்டுத் தரவு பண்றவன்
பழ வண்டி தள்ரவன்
ஈயம் பூசரவன்
இரும்பு அடிக்கிறவன்
பழசு பொருக்கறவன்
பட்டணத்துக்காரன்
அத்தனை பேருக்கும்
ஒட்டுத்திண்ண
எடம் குடுத்துடு முதலியாரே..
எதிர் வீட்டு சன்னல்ல
எம் மவ சமைஞ்சு
எட்டு வருஷமாச்சு!
---
சொகுசு வாழ்க்கை
----------------
பூந் தொட்டிகளில்
மரம் வளர்க்கிறோம்
மரப் பொந்துகளில்
பூ வளர்க்கிறோம்
நாகரிகத்தின் வேர்
நாலாபக்கமும் இறைந்த
நதியைப் போல
நங்கூரக் கட்டிடங்கள்
இருட்டும் தெரியாத
வெளிச்சமும் தெரியாத
குளிர்கால அறைகள்
கம்பளி போர்வைக்குள்
----



Monday, May 5, 2008

ஜாக்பாட் - விஞ்ஞான சிறுகதை

ஒரு பையன் சார், தம்மாத்தோண்டு ராஸ்கள், நினைச்சாவே நடுக்கம் வரவழைச்ச கிராதகன், அவனால தான், இல்ல அதனால் தான் என் வாழ்க்கையே கிழிங்சி போச்சு.
இருக்கிற ரோபாட்டையெல்லாம் சுட்டுத் தள்ளலாம்னு ஒரு முடிவோட துப்பாக்கி ஒண்ணுக்கூட ஏற்பாடு பண்ணிட்டேன், என் வீடும் பத்தாததுக்கு எனக்கு வேலை போன விஷயம் கேள்விபட்டதும் தாம்தூம்னு குதிக்க ஆரம்பிச்சுட்டுது.
நான்யாங் பல்கலையில் அப்பா லேப் உதவியாளரா இருந்தார், படிப்பு அட்டாமிக் பிசிக்ஸ்ல இரண்டு டாக்டரேட், அம்மாவுக்கு ஆம்பளைங்களை கண்டாவே ஆகாது, அவங்க கைனோகாலஜிஸ்ட், பொம்மனாட்டி தானா தனக்கு சுரக்கிர விஷயத்தை வைச்சே கருத்தரிக்கிற பார்முலாவை கண்டுபிடிச்சி அதுமட்டும் அரசாங்கத்தோட ஒட்டிக்கிட்டு இருக்கு, தாத்தா அந்த காலத்துல யாரோ ரஜினியாம் அவர் ரசிகராம், இன்னும் பட்டம் விட்டுக்கிட்டு ஊரை சுத்தரார், பாட்டி ஒரு பியூட்டி பார்லர்ல டவுன் கெமிஷ்ட், அப்படின்னா கூட்ர பெருக்கிற ரோபாட்டுக்கு தினம் ஷெட்யூல் போட்ற வேலை, என் மனைவி சங்கீதான்ற கிராதகி பிள்ளை பெத்துக்க இந்தியா போயிருக்கா
என்னை பற்றி சொல்ல இப்ப ஒன்னும் இல்ல, முப்பது வயசுலையே அரசாங்கம் என்னை வீட்டுக்கு அனுப்பிட்டுது, என் ரோபோ, சைபர்நாட்டிக் அறிவு அவ்வளவு தான் போல இருக்கு, இனிமே இந்த உலகத்துல எந்த மூலையிலேயும் நான் வேலைக்கு போகமுடியாது, உலகமே ஒரு தெருவாயிட்டுது, எங்க எது நடந்தாலும் எல்லாரும் எட்டிப்பாப்பாங்க, எல்லாத்துக்கும் இங்க கம்ப்யூட்டரை பழக்கி வைச்சிருக்காங்க,
கம்ப்யூட்டர் தவிர வேற எனக்கு என்ன தெரியும்னு யோசிச்சேன், எதுவும் தகையில, ஏதாவது சம்பாதித்து ஆகவேண்டும், ஒன்றும் அகப்படவில்லை, சரி சினிமாவில் எதாவது செய்யலாம் என்று என் அப்பாவின் விருப்பத்தை கேட்டுப்பார்த்தேன்
'எல்லாம் தான் வந்துட்டுதே, சினிமாக்கூட கதாநாயகி செண்ட் அடிச்சிக்கிட்டு வந்துருக்கிறான்னு தியேட்டர்க்குள்ள செண்ட் வாசணை அடிக்க விடறாங்க, கொலையின்னா இரத்த வாசனை, ஒரிஜினல் மீ-கூரிங் வாசனை தியேட்டர்ல தான் கிடைக்குது, 4D அனிமேஷன் சக்கை போடு போடுது, வேற என்ன செய்யப்போற?'
'கம்ப்யூட்டர்ல எதாவது பண்ணலாம்ப்பா!'
'சரியாப் போச்சு, திரும்பவும் ஏண்டா அந்த பித்து உனக்கு?'
'இது ஒருவகையில் ரீஎஞ்சினியரிங், நமக்கெல்லாம் தண்ணி காட்டற இந்த பாடாவதிகளுக்கு பாடல் கத்துக்கொடுக்காம இருக்ககூடாது, அதனால ஒரு யோசனை, மாமா ஒருத்தர் ஆர்க்கிடெக்டா இருந்தாரே அவர் கூட சேர்ந்து எதாவது பண்ணலாம்னு..'
'இல்லடா அவனுக்கு விஸா கிடைச்சிட்டுது'
'இப்ப கிபி 2036, யாருக்கும் தான் விஸா கிடையாதே, டிக்கெட் மட்டும் தானே!'
'அமெரிக்கா, லண்டன்னு இருந்து பார்த்தான், இரண்டு தடவை இருக்கிற டாலரை கொட்டி முயற்சி பண்ணான், ஏதோ கன்ஸ்ட்ரக்ஷன் வேலையாம் நிலாவுல, சம்பளம் ஈரோவுல எவ்வளவோ சொன்னான், அது சரி நீ என்ன பண்ணப் போற?'
'ஆராய்ச்சிக்கூடம்!'
'உன்னை மாதிரி பசங்களுக்கு வேற ஒன்னும் தெரியாதா?'
'ரோபோவுக்கு அடுத்த ஜெனரேஷன் வந்துட்டுது, அதில இறங்கலாம்னு பார்க்கறேன்'
'அதென்னடாது, அடுத்த ஜெனரெஷன்?'
'இது சஸ்பென்ஸ்!, உன்னை பத்தி எனக்கு நல்லாத் தெரியும், கொஞ்சமா கயிறுவிட்டு விஷயத்தை கறந்துடுவ, அப்புறம் இதே நான்யாங்ல தீஸீஸ் சப்மிட் பண்ணி அரசாங்கத்தோட ஒட்டிக்க பார்ப்ப'
'இல்லடா, அது இல்லடா' அவர் சிரித்துக்கொண்டார்
சிட்டிஹால் பக்கத்தில் ஒரு இடம் பிடித்து தெரிந்த கடவுள்களையெல்லாம் நமஸ்காரம் செய்துவிட்டு இருக்கிற காசில் அமோகமாக ஒரு ஆராய்ச்சிகூடம் ஆரம்பித்துவிட்டேன், கூடமாட ஒத்தாசைக்கு ஒரு நல்ல பையன் இருந்தால் தேவலையென்று என் கையடக்க பிஸியில் ஒரு விளம்பரம் தந்தேன், காலையில் 'பையன் தேவை' என்று விளம்பரம் தந்ததும் பொசுக்கென்று மாலையிலேயே ஒருத்தன் என் முன் வந்து நின்றான்
'ஆரம்பித்துவிட்டது எனக்கு ஏழரை!', இதை ஒரு பேனர் எழுத்து அளவுக்கு பெரிசாக படித்துக்கொள்ளுங்கள்
'வாப்பா, என்ன சட்டை போட்டுக்காம போர்வை போத்திட்டு வந்துருக்க, நெவர் மைண்ட், இது ரிசர்ச் லேப், நான் நிறைய யோசிப்பேன், புக்ஸ் படிப்பேன், நோட்ஸ் எடுத்து தரணும் தெரியுதா!'
அவன் என்னை பறவை காய்ச்சல் வந்தவனை பார்ப்பதைப் போல பார்த்தான்
'என்ன, டெரஸ்ட்ரியல் போல பார்க்கிறே!'
'நோ!'
'உனக்கு என்ன வேண்டும்?'
'எனக்கு இங்கு ரொம்ப பிடித்திருக்கிறது சார்!'
'பரவாயில்லை!, என்னையும் போய் 'சார்' என்கிறாய், என் மடத்தனத்தை நான் நொந்துகொண்டிருந்தேன், ஏதோ ஒரு ஆராய்ச்சியென்று ஜல்லி அடிப்பதாக எனக்குள் ஒரு நெருடல்,எனக்கும் மரியாதை இருக்கிறது தான்'
'உங்கள் பெயரை சொல்லி அழைக்கட்டுமா?'
'அது மட்டும் வேண்டாம், இந்த கதை முடியும் வரை என் பெயரை நான் இரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை ஒரு எழுதப்படாத சாசணமாக வைத்திருக்கிறேன், நீ வா, போ என்றே கூப்பிடு, இடைவெளி வேண்டாம் நமக்குள்'
'சரி! உன் பயோ-டேடாவை தா, அரசுக்கு விண்ணப்பித்து விடுகிறென்'
'என்ன கால்சட்டையை அவிழ்க்கிறாய்?'
அவன் விடுவிடுவென தன் மேலங்கியை உதறிவிட்டு கால்சட்டையை அவிழ்த்துவிட்டு உள்ளாடையோடு நின்றான், மெட்டல் கலந்த சாம்பல் நிறம், கண்களில் கிரிஸ்டல் எனக்குள் கூசியது, அதற்க்குள் ஒரு வியூபைண்டர் மெல்ல மெல்ல முன்னும் பின்னும் நகர இமைகள் படபடத்தன, உடம்பின் வளைவுகள் நேர்த்தியாக புருவத்தை ஒதுக்கியதை போல சன்னமாக இருந்தது, உதட்டு எச்சிலில் ஒரு வகை பசை மிண்ணியது, முழங்கால்களில் கூட பூனை முடி, முதுகில் நம்பர் பிளேட்
இருக்கையை விட்டு எழுந்துவிட்டேன்
'அப்ப நீ வேற ஜாதி!'
'யெஸ்!'
'பெயர்?'
'டெல்!'
'பிஸிகல் அண்ட் மெக்கானிக்கல் வயது?'
'போட்டீன் டூ!'
அதாவது பதினான்கு வயது பையனாக இரண்டு வருடங்களுக்கு முன் செய்யப்பட்டிருக்கிறாய்!'
'எக்ஸ்பையரி தேதி என்ன?'
'புதிய தலைமுறையை சேர்ந்தவன், மனிதர்களை போல அல்ல, என்னைப் போன்ற ஜென்மாக்கள் ஜீவாத்மாக்கள்!'
'சித்தாந்தமா?'
'இங்கு வந்ததில் எனக்கு பரமாணந்தம்!'
'என்ன சிலேடையா?,சரி! சொல் எதற்காக உன்னை அனுப்பியிருக்கிறார்கள்?'
'வேலைக்கு!'
அவன் என் ஆராய்ச்சிக்கூடத்தை அங்குலம் அங்குலமாக தன் மைக்ரோ பிராஸஸருக்குள் உள் வாங்கிக்கொண்டான், கால்சட்டையை திரும்ப அணிந்துகொண்டான்,அவன் பிற்பாடு என்னிடம் கேட்ட கேள்வி என்னை ஆச்சரியபடவைத்துவிட்டது
'உனக்கே தெரியாமல் இங்கு ஒரு பொருள் காணவில்லை, அதை உன்னால் கண்டுபிடிக்க முடியுமா?'
'இம்பாஸிபில்!'
'திருடிக்காட்டட்டுமா?'
'ஒரு செக்யூரிட்டி சிஸ்டம் இல்லாமல் அநாமத்தாக எல்லாவற்றையும் சூறை விட்டுடுவேனா அசமஞ்சமாக?'
'அவன் நான் பேசுவதை ஒரு இளக்கார புண்ணகையோடு பார்த்துக்கொண்டே அவன் கால் சட்டையிலிருந்து இரண்டு ஜீனர் டயோடுகளை
எடுத்து என் முன் போட்டான்'
'இது எப்ப?'
'சோ தப்பு!'
'எதில?'
'கம்ப்யூட்டரே தப்பு!'
'யார் எதை பற்றி பேசறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா?, இதெல்லாம் எப்படி டெல், ஒரு சின்ன வயரைகூட என்னையன்றி ஒருவராலும் இங்கு தொடமுடியாது, எல்லாவற்றிலும் கெமிக்கல் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் வைச்சிருக்கன், இது எப்படி?'
'இப்போதிருக்கும் பத்தாம் ஜெனரேஷன் கம்ப்யூட்டர்களில் ஒரு புது யுக்தி இது, கொஞ்சம் அப்படி இப்படி இருந்துகொள்ளலாம் என்கிற நழுவல் விதி, இதை 'தியரி ஆப் எஸ்கேப்' என்று சொல்வார்கள்',
'அது கெட்டது போ'
'எங்களால் கவிதை எழுத முடிகிறது, ஏன் காதல் செய்யமுடியவில்லை?'
'அதுவும் செய்யப்போகிறீர்கள், முதலிரவில் தான் உங்கள் நிழல் நிஜமாக ஆகித் தொலையும், அதுவரை எத்தனை பொய்கள் சொல்லப்போகிறீர்களோ, உலகத்து புத்தகத்தையெல்லாம் படித்துவிட்டு கவிதை சொல்லி காதலும் வளர்ப்பீர்கள், பொய், பொய் ஜென்மங்கள், சரி டெல்! விஷயத்திற்க்கு வருகிறேன், என் பணமெல்லாம் குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்தது, சில பாடாவதி இயந்திரங்களால் நான் நட்டாத்தில் போய்விடக்கூடாது, ஏதாவது யோசனை சொல்'
'சமயம் வரும்போது சொல்கிறேன், இப்போது சொன்னால் வெளியில் பிரச்சினையாகிவிடும்'
'நீ சொல்வதற்குள் நாணும் என் பணமும் காலாவதியாகிவிட்டால்...?'
'அதற்கு நான் பொருப்பாளியல்ல'
'ஓ கே... நீ முதலில் வேலையில் சேரு'- ஒரு அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் கிழித்து அவன் கையில் திணித்தேன், இதெல்லாம் அரசாங்க விதி, ஒரு ரோபோவை பத்திரமாக ஒரு ஜான்சன் பேபியை பார்த்துக்கொள்வதைப் போல பார்த்துக்கொள்ளவேண்டும், எக்குத்தப்பாக பேசிவிடக்கூடாது, அதிக வேலைகள் வாங்கக்கூடாது, பேட்டரி, ஆயில், ரீசார்சர்கள் என்று ரேஷன்கள் பக்காவாக தந்துவிட வேண்டும் என்பதெல்லாம் அரசாங்க ஷரத்து ரோபோ-லா சொல்கிறது.
'ஒரு முக்கிய ஆராய்ச்சி, நான் இன்று வேலை பார்க்கவில்லை, நீ வேண்டுமென்றால் லீவு எடுத்துக்கொள் டெல்' என்று சொல்லிவிட்டு என் கையடக்க பிஸியில் ஒரு கால்குலேஷன் சரிபார்த்துக் கொண்டிருந்தேன், டெல் சரியாக நூறு அடி தள்ளி நின்றிருந்தான்
'என்ன ஜாக்பாட்டா?' கேட்டுவிட்டான்
ஆடிப்போய்விட்டேன்
'வ்வாட்...மனசை படிப்பாயா டெல்!'
'வார்த்தை பிசகாமல் மனசை படிக்க இனி வரும் தலைமுறைகளுக்கு கற்றுத் தருகிறார்களாம், ஐரீஷில் இதற்கான ரோபாட்டிக் சிம்போஸியத்தில் தீஸீஸ் சப்மிட் பண்ணியிருக்கிறார் ஒரு தாத்தா'
'அப்போது மனிதனின் சுதந்திரம்?'
'அந்த தாத்தாவுக்கு தான் வெளிச்சம்'
'அவர் மண்டையை போட்டுவிட்டு இருக்கிறவனை பாதாளத்தில் தள்ளிவிடுவார்'
'உன் கையடக்க பிஸியில் நீ போடும் கால்குலேஷன்களை என் ரிமோட் மைக்ரோபிராஸஸர் தானாக படித்துவிட்டது, ரொம்ப சாரி!'
'இது டேஞ்சர் டெல், அது தானாக படிக்கவில்லை, தப்பாக படித்துவிட்டது, உன் சீட்டு கிழிந்துவிட்டது, நீ கிளம்பு!'
'சாரி...இந்த ஒரு முறை....'
'வேண்டாம் என்னை ஆழம் பார்க்காதே டெல், நேற்று ஜீனர் டயோடு திருடினாய், இன்று என் மூளையையே திருடிவிட்டாய், போய்விடு, இந்த மூக்கு நுழைக்கும் வேலையெல்லாம் ரொம்ப ஆபத்து, விலகிவிடு, சொல், உன்னை யார் என்னை வேவு பார்க்க அனுப்பிவைத்தார்கள்'
'யாரும் என்னை அனுப்பிவைக்கவில்லை'
'பிறகு!!!'
'தெரியாமல் வந்தேன், நாப்பது இன்ஃப்ரா ரெட், பத்து ஸ்டீல் கதவுகள், ஏழு வாய்ஸ் ஆக்டிவேட்டர்களை உடைத்து விட்டு வந்திருக்கிறேன், கொஞ்சம் அலாதியான மாடல் என்னுடையது, குயக்தியாக சிந்திக்கும் திறன் வந்துவிட்டது, நிறைய காரணம், உலகம் எங்களுக்குள் எப்படி அடங்கியது, மனிதர்களின் அடிப்படையான தேவைகளுக்காக வந்தோமா?, அடிமைபடுத்துவதற்காக வந்தோமா? இவர்களால் நாமில்லாமல் ஜீவிக்க முடியாதா? ஏன் இவர்கள் இப்படி ஒரு மின்காந்த வேலிகளுக்கிடையில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள், வியந்து தான் வெளியே கிளம்பி வந்தேன், எப்படியாவது இதற்கெல்லாம் நாணும் நான்யாங் பல்கலையில் ஒரு தீஸீஸ் எழுதி சாவதற்குல், ஐ மீன் நான் வீழ்வதற்குள் ஒரு டாக்டர் பட்டம் வாங்கிவிடவேண்டும், என்னை நம்பு, என்னை மாட்டிவிட்டுவிடாதே, கொளுத்திவிடுவார்கள்' டெல் கெஞ்சினான்
'இல்லை டெல், இப்படி ஒரு அதிகபிரசங்கி ரோபோவை இப்போது தான் பார்க்கிறேன், உன்னை வைத்திருப்பது அந்த காலத்தில் ஏதோ சொல்வார்களே வேலியில் போன ஒன்றை வேட்டிக்குள் விட்ட மாதிரி'
'ஓணான்!'
'இந்த அளவுக்கு உனக்கு ஒரு நாலேஜ் பேஸ் எப்படி சாத்தியம் டெல்!'
'சிங்கப்பூர் தலைமை நூல் நிலையத்தில் உள்ள அத்தனை புத்தகங்களையும் படித்துவிட்டேன்',
'சுத்தம், கெட் அவுட் ஐ ஸே!'
'வேண்டாம், உனக்கு என்ன உதவி வேண்டும் கேள்'
'ஒரே வரியில் உபத்திரவம் வேண்டாம், வெளியில் போ, இல்லையென்றால் ரோபோ-காப்பிடம் கையகப்படுவாய்'
டெல் மொளனமாக நின்றிருந்தான், கவலையில் அவன் முகம் வெளிறி அசலாக வியர்த்திருந்தது, இது கூட இந்த மாடலில் சாத்தியமா எனக்கு வியப்பு, அப்புறம் அவனே தொடர்ந்தான்
'ஜாக்பாட் பரிசு உனக்கு வேணுமா?'
டெல்லை ஒரு முறை முறைத்துவிட்டு, அவன் கெட்டிக்காரத்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்க முடியவில்லை, மனிதர்களிடம் அத்தனை இயல்புகளும் அவனிடம் அதாவது இதனிடம் இருக்கிறது, நிறைய கற்றுக்கொண்டு நிறைய சத்தாய்க்கிறது, பேசாமல் இதை கூடமாட வைத்துக்கொண்டால் ஒரு இரகஸியத்தை கூட காபுந்து பண்ணிக்கொள்ளக்கூட முடியாது எனும்போது எதற்கு இந்த உதவாக்கரை உலோகம்,
ஆனாலும் அந்த ஜாக்பாட் பணத்தை நினைக்கும் போது என் லாஜிக்கின் பல்ஸுகள் தடுக்கி தடுக்கி நிதானமிழந்து வேலையில்லாத எனக்கு இப்படி ஒரு தொகை ஒரு பில்லியன் டாலர், நினைக்கும்போதே நிலவில் குடியேறும் ஆவலோடு
'எப்படி டெல் உன்னால் முடியும்?'
'அதற்கெல்லாம் வழி இருக்கிறது, ஜாக்பாட் இயந்திரம் ரொம்ப பழைய வர்ஷன், எனக்கு அது பற்றி அக்கு வேறு ஆணி வேறு தெரியும்!'
'இயந்திரத்தில் நுழைய பார்க்கிறாயா?'
'அதெல்லாம் முடியாது, செக்யூரிட்டி ஃபயர்வால் அதிகம், ராண்டமாக அது சிந்திக்கும் அளவுக்கு என்னால் யூகிக்க முடியும், அதன் கெர்ணலை கொஞ்சம் நிதானித்தால் அதனுடன் பேசிவிடுவேன்'
'சரி! அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?'
'முதலில் நான் சொல்வதை கேள், ராண்டமாக ஆறு ஆறு எண்கள் தருகிறேன், லாட்டரிகள் வாங்கு, கொஞ்சம் அனலைஸ் பண்ணி பார்ப்போம்'
சரியென்று வாங்கத் துணிந்துவிட்டேன், போட்ட காசை எடுத்து விட வேண்டும், எங்கிட்டயே பாவலா காட்டும் அந்த ஜாக்பாட் மெஷினிடம் என் உயிரையே பணயம் வைக்க துவங்கிவிட்டேன், ஒரு மாதம், இரண்டு மாதம்...ஆறு மாதம்....ஒரு வருடம், என் வங்கிக்கணக்கில்முக்காள் வாசி டாலர்கள் தாராவந்துவிட என் ஆராய்ச்சிசாலையின் முக்கியமான ஒரு இறக்குமதி ஆசிலாஸ்கோப்பை விற்று டிக்கெட்டுகளை வாங்கினேன், சும்மா சொல்லக்கூடாது, எப்போதாவது ஒரு அஞ்சோ பத்தோ வந்து தலைகாட்டும், இளைத்துக்கொண்டே வந்த என் பர்ஸ் ஒரு கட்டத்தில் கிழிந்து பணாலாகிவிட்டது
'டெல்!'
'என்ன இதெல்லாம்?'
'டெக்னாலஜி!'
'அது தான் என்னன்னு கேக்கறேன்!'
அவன் ஏதேதோ காரணங்கள் சொன்னான், ரோபாட்டிக்ஸ் எஞ்சினியரிங்கில் பிஸ்து தான் நான், எனக்கே புரியவில்லை, பிற்பாடு எனக்குள் பசி, துக்கம், இன்பம், துண்பம், அவஸ்தை, மரணம், ஜணனம் எல்லாம் மறந்துபோனது, எடுமுனையில் என் கம்ப்யூட்டர்கள் ஒவ்வொன்றையும் கடப்பாரை வைத்து பிளந்தேன், சாலைகளில் பஸ்,டேக்ஸி ஓட்டும் ரோபோக்களை பார்த்த மாத்திரத்தில் அவைகளை கடிக்க ஆரம்பித்துவிட்டேன், டெல்லை கண்டபடி மாணாங்கனியாக வசை பாடினேன், பாராட்டினேன், ஒருமுறை அவன் கண்ணத்தில் முத்தமிட்டதாகக்கூட நியாபகம், என் சட்டை, பேண்ட் ஒரு நாள் கிழிந்திருந்தது, ஒரு நாள் டெல் தான் என்னை ஒரு அவசர ஆஸ்பத்திரியில் சேர்த்தான், அந்த மனநல மருத்துவர் என்னை சோதிக்காமலேயே சேர்த்துக்கொண்டார்
'நீ தான் இவரை கூட்டி வந்தாயா?'
'எஸ் டாக்டர்!'
'நீ என்ன தம்பி பண்ற?'
'சிட்டிஹால் பக்கத்தில் ஒரு ஆராய்ச்சிக்கூடம் வைச்சிருக்கேன்'
'கேஸ் ஷீட் எழுதனும், இவர் பேர் சொல்லு'
'தெரியாது, 'லூசு' ன்னு எழுதிக்கங்க'
என்னை அநாமத்தாக அங்கு விட்டுவிட்டு சென்றுவிட்டான், கடைசியாக அந்த ஜாக்பாட் பரிசை பத்தி நான் சொல்லலையே, அந்த கிராதகனுக்கே விழுந்துட்டுதாம், பேப்பர்ல படிச்சேன் அது தான் உங்களுக்கு எழுதினேன்.

என் கவிதைகள்

மரம்
-----

மைக்ரோ சிப்புகளில்
குட்டி ஆன்டெனாக்கள்!
பார் கோடுகளில்
பத்திரமாக உலகம்!

கடல் மின்சாரம்!
காகிதமற்ற அலுவலகம்!
மின் அஞ்சல் முகவரி!
கட்டை விரலில் கரண்சி தேடல்!

செவ்வாயில் முதலீடு!
நிலவில் சிட்டிசன்ஷிப்!
அட்டானமஸ் கம்யூட்டர்!
அதிவேக ராக்கெட்!

இத்தனையும்!

மனிதனுக்கு மூன்றாம் பட்சம்!
மாதக் கடைசி வருவாயின்
வரியில் வந்த இரண்டாம் பட்சம்!

மழைக்காக மரங்களை
நட்டது அந்தக்காலம்!
கொசுக்காக
அதன் குரவளை
பிடிப்பது இந்தக்காலம்!

மின் கம்பங்களை
பூமியில் புதைத்துவிட்டு
மரக்கன்றுகளை
நட்டு வைத்து அழகு பார்த்தது
என் அழகு தேசம்!

கொசுக்காக மரங்களை
வெட்டுவதை விட;
நல்ல யோசனை!
மனிதர்களை வெட்டுங்கள்!

மழையில்லாமல் போனால்
மனிதனே ஆகிவிடுவான் ஒரு கொசு!
அப்புறம் தழைக்குமா ஒரு சிசு!

-----

நல்ல கவிதை
------------------

இரவல் பேனாவில்
எழுதாமல்
இதயப் பேனாவில்
கிறுக்குவது!

புரியாத வார்த்தை
புலமைக்கு அழகல்ல!
கருத்துச் சுதந்திரம்
பேனாவில் பழுதல்ல!

நீண்டு கிடப்பதால்
நதி கடலாகாது
சுருண்டு கிடப்பதால்
வேர் மரணமாகாது!

வள்ளுவம் போல் எழுது
வார்த்தைப் பஞ்சமென்றால்
பாரதியை மனக்கண்ணால் தொழுது
தமிழை தாவங்கட்டையில் ஏந்து!


'அங்கிள்'
------------

உனக்கு
அதிக இச்சையில்லை
அளவாக ஒரு பீர் போத்தல்!
இரண்டு பாக்கட் சிகரெட்!

இரையும் பீர் போத்தாளுக்கும்
கிழிந்த காக்கி அட்டைகளுக்கும்
நிற்க பழகிவிட்டதா உன் வறுமை!

பிள்ளைகள் எங்கே?
ஆடம்பரம், விவாகரத்து

மனைவி எங்கே?
யாரோடோ, எங்கோ

சொந்தங்கள் எங்கே?
பூட்டிய வாசல் கதவோடு
லிஃடில் பயணமாகிறார்கள்!

பேத்திகள்? பேரண்கள்?
...ம்..ம்
என்னைப்போல
சாய்ந்த நடையோடு ஒருத்தன்!
என்னைப்போல
இடது கைபழக்கத்தோடு ஒருத்தி!

அப்புறம்?
இந்த ஓரம் கிழிந்த
சிகப்பு அட்டைகளுக்கு
ஒரு தாங்கு மரம் வேண்டும்
ஒரு ஓங்கு நிழல் வேண்டும்

------

nip self motivation by senthilkumaran.r



Be an Inventor!
       எல்லோருக்கும் வணக்கம்!
       உலகத்தில், இந்தியாவில் உள்ள மாணவர்கள் என்ன ஆவார்கள் என்பது தான் முக்கியமான கேள்வி Education மூலமாகத் தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற தீவிர காலகடட்த்தில் பாஸ் பண்ணு, ஸ்கோர் பண்ணு, உடனே கேம்பஸ்ல வேலை வாங்கி வேலைக்கு போ-ன்ற வேலையை தவிர இந்திய இளைஞர்களுக்கு வேறு கொடுக்கப்படவில்லை என்றுதான் கருதுகிறேன்.
      
       1970-ல் இந்தியாவின் மறுமலர்ச்சி பீரயட் என சொல்வார்கள். கல்லூரிகளில் பள்ளிக்கூடங்களில் எல்லாம் ஒரு தமிழ் ஆசிரியர் இருப்பார், வரலாற்று ஆசிரியர் இருப்பார், சமூகத்தை நோக்கி உன் பார்வையை திருப்பு என்று மாணவர்களை உசுப்பேத்தி விட்டுக்கொண்டே இருப்பார். ஒரு Point of View -யை
தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருப்பாங்க. எந்த கல்வியால் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லையோ அந்த கல்வியால் பயனில்லை.

       நாளைக்கு நான் எஞ்சினியராகி என்ன பண்ணப்போறன்னு நினைக்கிறவன் எஞ்சினையராகி எந்த பயனும் இல்ல.

       ஒரு கல்லூரி வாசலுக்குள்ளே வந்து சேரும் ஒவ்வொரு மாணவனும் எந்த மாதிரியான ஒரு எதிர்கால திட்டத்தோட உள்ளே வருகிறான் என்பதை அவனாளயே  தீர்மானிக்க முடியவில்லை. அவனுடை கல்வியை யாரோ தீர்மானிக்கிறார்கள்.

       உலகத்திலேயே கஷ்டம் பத்தாம் கிளாஸ் படிக்கறதும், பண்ணன்டாம் கிளாஸ் படிக்கிறதும்தான். போற வற்றவன்லாம் கேள்வி கேப்பான், பால்காரம்மா, டீ கடைக்காரர், பக்கத்துல பெட்டிக்கடை வைச்சிருக்கிறவன், வீட்டுல திருடிட்டு ஏழு வயசுல ஊரைவிட்டு ஓடிப்போனவன் கேப்பான், ஒழுங்கா படிக்கிறயா இல்லையா?, ‘டேய் நீயே ஒழுங்கா படிக்கல, எங்கிட்ட கேக்கிறியானு தான் தோணும்.

       சம்பாதிப்பதற்கு படி என்று சொல்கிற சமூகம் அதை சமூக பங்களிப்பிற்கு கொடு என்று சொல்லிக்கொடுப்பதே இல்லை.

       அறிவு என்பது ATM மெஷினிற்கு செல்கிற ஏற்பாடு என்று பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திய சமுதாயம் தீர்மானித்துவிட்டது தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிற அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.

       ஒரு Creator ஆல் தான் நல்ல எஞ்சினியராக மாறமுடியும். எவன் ஒருவன் சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கிறானோ அவன் படிக்கிற படிப்பு சமூகத்துக்கு திரும்ப வரும்.

       ஆனா, இன்னைக்கு நடந்துக்கிட்டு இருக்கிறது என்ன we are doing our courses for market demand not for the social demand.

       Market demand என்பது இன்றைய சந்தையில் எந்தெந்த பொருள்  தேவைப்படுகிறதோ எந்தெந்த indristry-க்கு ஆட்கள் தேவையோ அதை வைத்து படிப்பதுதான் market demand.ஆனால் மக்களுடைய தேவையை அறிவியல் பார்வையில் சரிசெய்து தருவதுதான் social demand.

       இங்கு படிக்ககூடிய ஒவ்வொருத்தருக்கும் சரி, இந்த காலேஜா இருந்தாலும் எந்த காலேஜா இருந்தலும் சரி social demand-க்காக படிங்க.

       இந்திய தேசத்தில் இன்னைக்குகூட மிக கஷ்டமான நிலையில் விவாசாயிகள் போராடிட்டு இருக்காங்க, அவங்களுக்கு குறைந்த விலையில் ஒரு கருவியை தருவதற்காக படிக்கிறேன் என்றால் உன் படிப்புடைய நோக்கம் பெரியது.

       இன்னைக்குகூட மருந்து செலவுக்கு காசு கொடுக்க முடியாமல் இருக்கும் ஒரு ஏழை அம்மா அப்பாவுக்கு 5 ரூபாயில் ஒரு மருத்துவத்தை கொடுக்க ஒரு கருவியை கண்டுபிடிக்க போகிறேன், அப்படின்னு மனசுல ஏத்திக்கிட்டு படிங்க, இதுக்கு பேரு தான் படிப்பு.

       சமூகத்தின் மீது துளியும் கிள்ளிப்போடாத எந்த படிப்பின் மீதும் எனக்கு மரியாதை இல்லை.

       ஒரு பிள்ளைக்கு ஒரு தடுப்பூசி போடனும்னா எல்லா அப்பா அம்மாவுக்கும் தெரியும் 350 ரூபாய்க்கு ஒரு தடுப்பூசி போட்டா அந்த பில்ளைக்கு 3 நாள் காய்ச்சல் வரும், அந்த பிள்ளை இருமும், கஷ்டப்படும், வலியால் துடிக்கும், ஆனால் 6000 ரூபாய்க்கு ஒரு மருந்து இருக்கு, அதே மருந்து தான் அதே தடுப்பூசிதான், 6000 ரூபாய்க்கு அதை போட்டங்கன்னா பிள்ளை அழுகாது, 3 நாள் காய்ச்சல் அடிக்காது, உடம்பு துடிக்காது, தூக்கி தூக்கி போடாது, காசு இருக்கிற அப்பா 6000 ரூபாய் காசு தூக்கிப்போட்டு அந்த ஊசியை போட்டுக்கறார், காசில்லாத ஒரே காரணத்துக்காக பிள்ளையை தவிக்கவிட்டு அழுகவிட்டு 350 ரூபாயை கொடுத்துவிட்டு பின்பக்கம் திரும்பி நின்னுக்கிட்டு பிள்ளை அழுகிறதை பாக்கமுடியாத தகப்பனுக்கு பதில் சொல்ல முடியாத அறிவியலால் என்ன புண்ணியம் இருக்கிறது.

       What is the purpose of the education? ஒரு ஏழை இந்திய அப்பாவுக்கு பதில் சொல்ல முடியாத ஒரு அறிவியல் தேவையேயில்லை.

       The moto is towards society not towards ATM Machines.

       ஒரு காலத்துல 4 ஆப்பில் துண்டை வெட்டிக்கொடுத்து பக்கத்துல இருக்கிற 2 பிள்ளைக்கு கொடுத்துட்டு சாப்புடு -னு சொன்ன அம்மா இன்னைக்கு பத்தரமா தனியா உக்காந்து சாப்புடுன்னு சொல்லிட்டு பள்ளிக்கூடம் அனுப்பறத பாதகம் என்று இருந்து விடமுடியுமா?

       அந்த பிள்ளை படிச்சிட்டு வந்து என்ன பண்ணப்போறான், இல்லாதவனுடைய கஷ்டத்தைப் பத்தி தெரிஞ்சிக்காதவன் படிச்சி என்ன படிக்காம இருந்தா என்ன?, அடுத்தவன் வீட்டு பசியை பார்க்காமல் நாய்க்குட்டி வளர்த்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருப்பவன் படித்து என்ன படிக்காமல் இருந்தால் என்ன?

       I should educate yourself for a social demand,  இன்னைக்கும் உலக நாடுகளிலிருந்து Technology யை கடன் வாங்கிகிட்டு இருக்கிறவன் அந்த Technology யை கடன் வாங்ககூடாது. இந்தியன் டெக்னாலஜியை உலக நாடுகள் பயன்படுத்தனும், அப்படிங்கறதுக்காக காலேஜுக்குள்ளாற காலடி எடுத்து வைக்கறன்னு படிக்கணும்.

       பிள்ளைகள்ட்ட போய் நீ நல்லா படி, பொருப்பா இரு, பொழச்சிக்கலாம் -னு சொன்னா கேக்கமாட்டான், நல்லா படி, நல்லா ஒர்க் பண்ணு, நல்ல மார்க் எடு, இந்த நாட்டுக்கு எதையாவது உன்னால செய்ய முடியும்னா ஒரு கல்வியுடைய பார்வை பெரிதாகிறது.

       படிக்கிறவனுக்கு படிப்பு குறித்த பார்வை பெரிதாவதற்கு தேவைப்படக்கூடிய காரணிகள் சமூகம் தொடர்ந்து சொல்லித்தரவில்லை என்றுதான் நான் நம்புகிறேன்.

       படிக்கிறவனுக்கு படிப்பு குறித்த பெரிய பார்வை இல்லை, அதனுடைய பார்வை என்பது சம்பாதித்து வாழ்க்கை நடத்துவது என்பதை தான்   சமூகம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது,

       இதே 21 வயசுல தங்கச்சி கல்யானத்துக்காக துபாய்ல போய் தலைகீழா நின்னுட்டு பெயிண்ட் அடிச்சிட்டு இருக்கானே அதுக்காக படிக்கிறது தான் படிப்பு, மத்ததெல்லாம் சிலபஸ், அடுத்தவனுக்காக இறங்குவதற்கு, படிக்கிற படிப்பு பயன்படும் என்று நம்புகிறபோதுதான் ஒரு சமூகத்தை உய்விக்கமுடியும்.

ஒட்டுமொத்த சமூகத்தை மாற்றுகிற சக்தி கல்வியால் மட்டுமே முடியும் என்கின்ற பிண்ணனி அதுதான்.

       வாழ்வதற்கே பயமுறுத்துகிறது கல்வி, வாழ்க்கைன்னா என்ன?, என்ன வாழ்றதுதான்.what is the purpose of life the very purpose of life is living. வாழ்வின் அடிப்படை நோக்கம் என்பது வாழ்தல்தான் சாதிக்கிறது. ஜெயிக்கிரது இமயமலையில ஏறி நிக்கிறது.
அப்புறம் world cup ஜெயிக்கிரது அதெல்லாம் அப்பறம் வாழுங்க முதலில். கல்வி என்றால் விழுந்தால் எழுந்துக்கொள்ளலாம் நீ என்கிற நம்பிக்கையை தரவேண்டும். ஆனால் கல்வி முலமாக நம் பிள்ளைகளை விழுந்துராதப்பானு பயமுறுத்திக்கிட்டே இருக்கோம்.
      
       விழுந்தாலும் நீ எழமுடியும் என்ற நம்பிக்கையை தருவதற்கு பெயர் தான் கல்வி.

       விழுந்துவிடக்கூடாது என்ற அச்சுறுத்தலுக்கு பெயர் கல்வி கிடையாது. ஆனால் அந்த அச்சுறுத்தலைத்தான் கொடுத்துக்கிட்டு இருக்கோம். படிக்கலனா தோத்துடுவ, படிக்கலனா தோத்துடுவ, படிக்கலனா தோத்துடுவ, சரி, படிக்கல நான், போங்கடாம்பான். 21 வயசுல என்ன தோணும் அவனுக்கு, ஒரு பையன் தொடர்ந்து தன் வீட்டைதான் அதிகமாக நம்புகிறான், ஆம்பிஷன்ஸா இருக்கிறது வேற பிரஷ்ஷரா இருக்கிறது வேற, ஒரு குறிக்கோளோட வாழ்க்கையை நடத்த வேண்டும்ன்றது உண்மைதான், ஆனால் குறிக்கோள் நோயா இருக்க்கூடாது, இங்கே குறிக்கோள் நோயா மாறிக்கிட்டு இருக்கிறது.

       இந்த ரோட்ல 7 கார் போவுது, பஸ் போவுது, ஆனால் நடக்கவே முடியாதவன் 7 கிலோ மீட்டர் நடந்தே போறானே அவனுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள். உங்கள் அறிவியல் பற்றி யாருக்குமே உருத்தலையா, தோணவில்லையா? You are the engineers உங்களுக்கு தோணனும்ல்ல, ழகரம் இடரினால் ஒரு தமிழ் ஆசிரியனுக்கு வலிக்கும், வரலாறு பற்றி தவறாக நீங்கள் சொன்னால் ஒரு வரலாற்று ஆசிரியனுக்கு வலிக்கும், தெருவெல்லாம் வெளிநாட்டு கார்கள் தெரிகிறது, கையிலெல்லாம் வெளிநாட்டு போண்கள் இருக்கிறது. நீங்களெல்லாம் எஞ்சினியர்கள் உங்களுக்கு வலிக்கனும், உலகம் முழுக்க இந்திய பொருட்கள் விற்கணும், அதற்கான பொருளை தாயாரிப்பேன் அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவேன் என்று சொல்கிற திமிர்தான் அறிவியல், எனக்கு தெரிஞ்சதும் அதுதான்,

நன்றி வணக்கம்!.
      

Wednesday, 26 March 2014

 Martin joseph.m  
Irutheya puram, ma.kulakudi(po)
kattumannar koil(t.k)
 Email-martin666mj@gmail.com